அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் நாளை (04.10) பிராந்திய சுனாமி உருவகப்படுத்துதல் பயிற்சி நடத்தப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று (03.10) தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படும் சுனாமி முன்னெச்சரிக்கையைப் பரப்பும் பொறிமுறைகளை மதிப்பீடு செய்வதும் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள கரையோர சமூகங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் ஆயத்த நிலையை அறிந்துகொள்வதுமே இந்தப் பயிற்சியின் நோக்கமாக அமைவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.