பிக்பாஸ் சீசன் 7 போட்டியில் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது, இம்முறை இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்குபற்றியுள்ளனர்.
கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாகா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், மணி சந்திரா, அக்ஷயா, ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு, விசித்ரா, சரவணன் விக்ரம், அனன்யா ராவ், பாவா செல்லத்துரை, விஜய் வர்மா ஆகியோர் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இம்முறை போட்டியில் இரண்டு வீடு, ஆனால் அதற்கு ஒரே சமையலறை, என்று விறுவிறுப்பாக பல புதிய விடையங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த போட்டியாளர்களுள் காதல் ஜோடியொன்றும் களமிறங்கியுள்ளமை இப்போது தெரியவந்துள்ளது.
மணி மற்றும் ரவீனா இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர் என்றும்,அவர்கள் காதலித்து வந்ததாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றது.
மேலும், ரவீனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் துபாய் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று மிகவும் நெருக்கமாக புகைப்படங்கள் எடுத்துள்ளமையும், ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
