ஜேர்மனி டச்சுவலே ஊடகத்தின் ஊடகவியலார் மார்ட்டின் கக் இலங்கை தொடர்பில் கேட்ட கேள்விகளினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோபமடைந்தார். உயிர்த்த ஞாயிறு கேள்வி தொடர்பில் கேள்வி கேட்ட போது, நீங்கள் கேள்விகளும் மூலம் என்னை ஒதுக்க முயற்சிக்கிறீர்கள் என குற்றம் சுமத்திய ஜனாதிபதி அதன் போது மேற்கத்தைய கலாச்சரத்தை வெளியே எடுங்கள். நிறுத்தங்கள். அவ்வாறு பேச வேண்டாம். என கூறினார்.
சர்வதேச விசாரணைகள் தொடர்பில் கேள்விகள் கேட்ட போது, பதிலளித்தவர், ஊடகவியலாளரின் குறுக்கு கேள்விகள் மற்றும் சில வார்த்தை பிரயோகங்களினால் பதட்டமடைந்த ஜனாதிபதி இரண்டாம் தரமாணவர்களை போல நடாத்த வேண்டாமெனவும், இலங்கையர்கள் மற்றும் ஆசியர்களை அவ்வாறு நடத்துவதாகவும், ஊடகவியலாளர் அவ்வாறு நடந்து கொள்வதாகவும் நேரடியாக குற்றம் சுமத்தினார்.
தொடர்ச்சியாக இந்து நேர்காணல் சீரான முறையில் செல்லவில்லை. வாக்குவாதமாகவே மாறியது. இறுதியில் “நீங்கள் நிறுத்துங்கள். நான் நிறுத்துறேன். நாங்கள் செல்வோம். நீங்கள் சரியான தயார்ப்படுத்தல்களின்றி இங்கே வந்து கத்துகிறீர்கள். நான் மனித உரிமைகளை மீறுவதாக கூறுகிறீர்கள். நான் அவ்வாறு செய்யவில்லை” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த நேர்காணலை நிறைவு செய்கிறார்.
குறித்த நேர்காணலின் வீடியோ காட்சி குறித்த ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நேர்காணலின் போது சர்வதேச விசாரணைகளுக்கு வாய்ப்பில்லை என மறுத்த ஜனாதிபதி ரணில், ஜேர்மனியில் அவ்வாறன விசாரணைகள் உள்ளனவா? இங்கிலாந்தில் உள்ளனவா? ஏன் எங்களிடம் மட்டும் மட்டும் கேள்வி கேட்கிறீர்க்ள் என ஜனாதிபதி ரணில் கேள்வி எழுப்பினார்.