கிளிநொச்சி மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவின் அறிவிப்பு!

கிளிநொச்சி மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவில் எழுதுதல் வாசித்தல் திறன் குறைத்தவர்களுக்கான வாய்மொழிப்பரீட்சையினை எதிர்வரும் 06ம் திகதி வெள்ளிக்கிழமை நடாத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே மேற்படி காரணங்களின் நிமித்தம் இதுவரை சாரதி அனுமதிப்பத்திரம் பெறத்தவறியவர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாது பயன்படுத்திக்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவின் பிரதம மோட்டார் வாகன பரிசோதகர் G.H.D.K விஜயசேகரா அறிவித்துள்ளார்.

மேலும், பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன் A9 வீதி, கிளிநொச்சி பழைய கச்சேரி வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவின் மாவட்ட காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்வதுடன், மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version