மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதிய தலைமைத்துவத்துடன் கட்சி ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை ஸ்ரீ சம்புத்தாலோக மகா விகாரைக்கு இன்று (04.10) காலை விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஆட்சிக்கு வருவது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் , தான் பொதுமான அளவு நாட்டை ஆட்சி செய்துவிட்டதாகவும், இனி அவ்வாறானதொரு திட்டம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு எதிர்கொண்டுள்ள நிலையிலிருந்து மீது எடுக்க தேவையான ஆலோசனைகளை வழங்க தமக்கு முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், சர்வதேச விசாரணைகள் தேவையில்லை எனும் தற்போதைய ஜனாதிபதியின் கருத்துக்கு தாமும் உடன்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.