சீனாவை போல வேறு சில நாடுகளும் தங்கள் விலங்கியல் பூங்காக்களுக்கு இலங்கையின் டோக் மக்காக் குரங்குகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் ஊடாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேராவின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான கோரிக்கையை விலங்கு உரிமை அமைப்புகளும் ஆர்வலர்களும் எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்ததால் அவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குரங்குகள், காட்டுப்பன்றிகள் மற்றும் மயில்கள் போன்ற விலங்குகள், அதிக பயிர்களை வீணாக்குவதால் ஆண்டுக்கு 20 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், குரங்குகளின் ஏற்றுமதிக்கு எதிரான விலங்குகள் உரிமை அமைப்புகளுடன் பயிர் சேதத்தைத் தடுப்பதற்கான முன்மொழிவுகள் குறித்து விவாதித்ததாகவும், ஆனால் அவை எதுவும் நடைமுறையில் சாத்தியமான தீர்வுகளாக அமையாதவை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.