உலகக்கிண்ண தொடர் இரண்டாம் போட்டி ஆரம்பம்

பாகிஸ்தான் எதிர் நெதர்லாந்து - உலகக்கிண்ண கிரிக்கட் தொடர் இரண்டாம் நாள்.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் போட்டி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையில் ஆரம்பமாகியுள்ளது. இந்தியா ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடருக்கு பின்னர் நெதர்லாந்து அணி உலகக்கிண்ண தொடரில் விளையாடுகிறது.

அணி விபரம்

நெதர்லாந்து அணி: ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (தலைவர்), மக்ஸ் ஓ டொவ்ட், பஸ் டி லீட், விக்ரம் சிங், தேஜா நிடமனுரு, போல் வான் மீகெரென், கொலின் அக்கர்மன், ரோலோஃப் வன் டெர் மேர்வ், லோகன் வன் பீக், ஆர்யன் டட், ஷகிப் சுல்பிகார்.

பாகிஸ்தான் அணி: பபர் அசாம் (தலைவர்), ஷதாப் கான், ஃபகார் ஷமான், இமாம் உல் ஹக், முகமட் ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமட், மொஹமட் நவாஸ், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version