இணையவழி உடனடி கடன் தொடர்பில் விசேட அறிவிப்பு!

இணையவழி உடனடி கடன் வழங்குனர்களுக்கு தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) தெரிவித்துள்ளது.

இணையவழி உடனடி கடன்மோசடிகள் தொடர்பான 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கடந்த மாதங்களில் கிடைக்கப்பெற்றதையடுத்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அரசு மற்றும் தனியார் வங்கிகளைக் காட்டிலும் குறைந்த வட்டி விகிதங்களை வழங்குவதாக அந்த நிறுவனங்கள் உறுதியளிப்பதாலும், கடன் வசதிகளை வழங்குவதற்கு குறைவான ஆவணங்கள் மட்டுமே தேவை என்று தெரிவிப்பதால், மக்கள் கடன் இந்த மோசடிகளுக்கு இரையாகிறார்கள் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடன் வசதியை பெற்றுக்கொள்ள, கடன் பெருநரின் தொலைபேசி தொடர்பு பட்டியல், படத்தொகுப்பு மற்றும் முக்கியமான தரவு சேமிக்கப்பட்டுள்ள பல இடங்களை அணுக பயன்பாட்டிற்கு அனுமதி தேவைபடுவதாகவும் இதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படுவதாகும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடனைப் பெற்ற நபர் குறிப்பிட்ட நேரத்தில் எந்தத் தவணையையும் செலுத்த முடியாவிட்டால், குறித்த கடன் நிறுவனம் வாடிக்கையாளரின் தனிப்பட்ட தொடர்பு பட்டியலை அணுகி, கடன் பெற்றவர் குறித்து அவரது அலைபேசி தொடர்பில் இருப்பவர்களிடம் முறைப்பாடு செய்வதுடன், அவர்களுக்கு தொந்தரவு செய்வதாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறான மோனசமான சம்பவத்திற்கு முகங்கொடுத்தவர்களில் பல பெண்கள் அடங்குவதாகவும், இது போன்ற இணைவழி கடன்களை பெற்றுக்கொள்ளும்போது அலைபேசியில் பிற பயன்பாடுகளை அணுக அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தேசிய அடையாள அட்டை நகல், கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் நகல்கள் மற்றும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்கள் (OTPகள்) போன்ற முக்கியமான தனிப்பட்ட விபரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம் என அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version