உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகளின் பற்றாக்குறையால் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் தடைபடுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட சத்திரசிகிச்சைகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் சிரமங்களை எதிர்நோக்குவதாக குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த மருந்துகளை வெளியில் கொள்வனவு செய்ய சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு மிகவும் பின்தங்கிய பகுதிகளில் இருந்து வரும் நோயாளிகள் இந்த தொகையை செலுத்தி வெளியில் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்வது கடினம் என்று மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.