
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பன்னிரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது.
இந்தியா, அஹமதாபாத் நரேந்திர மோடி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
துடுப்பாடிய பாகிஸ்தான் அணி சிறந்த ஆரம்பத்தை பெற மொஹமட் சிராஜ் தடுத்து அபத்துல்லா சபீக்கின் விக்கெட்டை தர்காத்தார். சிறிது இடைவேளையில் பாண்ட்யாவின் பந்துவீச்சில் இமாம் உல் ஹக் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் பபர் அஷாம், முஹமட் ரிஷ்வான் இணைப்பாட்டம் ஒன்றை ஏற்படுத்தி அணியினை மீட்டனர். 82 ஓட்ட இணைப்பாட்டத்தை முறியடித்து பபர் அஸாமின் விக்கெட்டை மொஹமட் சிராஜ் கைப்பற்றினார். அந்த விக்கெட்டோடு மேலும் நான்கு விக்கெட்கள் 16 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன. அத்தோடு பாகிஸ்தான் அணி தடுமாறிப்போனது.
கிரிக்கெட்டின் பரம வைரிகளான இந்தியா பாகிஸ்தான் மோதலை உலகமே எதிர்பார்த்து கார்த்திருக்கிறது. இது வழமை. அதிலும் உலகக்கிண்ணம் என வரும் போது இந்த அணிகளது மோதல் மேலும் விறு விறுப்பை தரும்.
1 இலட்சத்துக்கு 10 ஆயிரத்துக்கும் மேலான பார்வையாளர்கள் நேரடியாக மைதானத்தில் பார்வையிட்டுக்கொண்டிருக்கும் இந்தப் போட்டியில் இந்தியா ஆக்ரோஷமாக பந்துவீசி பாகிஸ்தான் அணியை கட்டுப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இந்த இலக்கை இரண்டாவது துடுப்பாடி இந்தியா அணி பெறுவது கடினமாக அமையாது.
இரு அணிகளும் உலகக்கிண்ண தொடரில் ஏழு தடவைகள் மோதியுள்ளன. ஏழு தடவைகளும் இந்தியா அணியே வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை இந்தியாவில் போட்டி நடைபெறும் நிலையில் இந்தியா அணிக்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.
குல்தீப் யாதவ் இறுக்கமாக அதிகமாக ஓட்டங்களை வழங்காமல் பந்துவீசி இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். மொஹமட் சிராஜ் ஓட்டங்களை வழங்கிய போதும் இரண்டு முக்கிய இணைப்பாட்டங்களை தகர்த்துக் கொடுத்தார். அடுத்து விக்கெட்கள் வீழ்த்தப்பட பும்ரா அதனை தொடர்நது விக்கெட்களை தகர்த்தார்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| அப்துல்லா ஷபிக் | L.B.W | மொஹமட் சிராஜ் | 20 | 24 | 3 | 0S |
| இமாம் உல் ஹக் | பிடி – லோகேஷ் ராகுல் | ஹார்டிக் பாண்ட்யா | 36 | 38 | 6 | 0 |
| பபர் அசாம் | Boweld | மொஹமட் சிராஜ் | 50 | 58 | 7 | 0 |
| மொஹமட் ரிஸ்வான் | Boweld | ஜஸ்பிரிட் பும்ரா | 49 | 69 | 7 | 0 |
| சவுத் ஷகீல் | L.B.W | குல்தீப் யாதவ் | 06 | 10 | 0 | 0 |
| இப்திகார் அகமட் | Bowled | குல்தீப் யாதவ் | 04 | 04 | 1 | 0 |
| ஷதாப் கான் | Boweld | ஜஸ்பிரிட் பும்ரா | 02 | 05 | 0 | 0 |
| மொஹமட் நவாஸ் | பிடி – ஜஸ்பிரிட் பும்ரா | ஹார்டிக் பாண்ட்யா | 04 | 14 | 0 | 0 |
| ஹசன் அலி | பிடி – சுப்மன் கில் | ரவீந்தர் ஜடேஜா | 12 | 19 | 02 | 0 |
| ஷஹீன் அப்ரிடி. | 02 | 10 | 0 | 0 | ||
| ஹரிஸ் ரவூப் | L.B.W | ரவீந்தர் ஜடேஜா | 02 | 06 | 0 | 0 |
| உதிரிகள் | 04 | |||||
| ஓவர் 42.5 | விக்கெட் 10 | மொத்தம் | 191 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ஜஸ்பிரிட் பும்ரா | 07 | 01 | 19 | 02 |
| மொஹமட் சிராஜ் | 08 | 00 | 50 | 02 |
| ஹார்டிக் பாண்ட்யா | 06 | 00 | 34 | 02 |
| குல்தீப் யாதவ் | 10 | 00 | 35 | 02 |
| ரவீந்தர் ஜடேஜா | 9.5 | 00 | 38 | 02 |
| ஷர்டூல் தாகூர் | 02 | 00 | 12 | 00 |
இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், ஷர்டூல் தாகூர்
பாகிஸ்தான் அணி: பபர் அசாம் (தலைவர்), ஷதாப் கான், அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக், முகமட் ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமட், மொஹமட் நவாஸ், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி.