இங்கிலாந்துக்கு அதிர்ச்சி வழங்கிய ஆப்கானிஸ்தான்

இங்கிலாந்துக்கு அதிர்ச்சி வழங்கிய ஆப்கானிஸ்தான்

இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இந்தியா, டெல்லி அருண் ஜட்லி மைதானத்தில் நடைபெற்ற உலகக்கிண்ண தொடரின் பதின்மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை 69 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இறுதிப் போட்டி வரை செல்லும் என எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியிடம் அடைந்துள்ள இந்த தோல்வி இந்த உலகக்கிண்ண தொடரின் முதல் அதிர்ச்சி முடிவாக அமைந்துள்ளது.

285 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே சம இடைவெளிகளில் விக்கெட்களை இழந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சு, வேகப்பந்து வீச்சு கலவை இங்கிலாந்தின் ஆரம்ப விக்கெட்களை பதம் பார்த்தன. ஹரி ப்ரூக் நிதானம் கலந்த வேகத்துடன் துடிப்பாடி அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.

பலமான துடுப்பாட்ட வரிசையை கொண்ட இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியிடம் இந்தளவுக்கு தடுமாறுமென யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. மொஹமட் நபி, ரஷீட் கான் ஆகியோரின் சுழற்பந்து வீச்சு இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களை தடுமாற வைத்தது. ஆரம்பத்தில் முஜீப் உர் ரஹ்மான் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை கைப்பற்றிய அதேவேளை இறுதியிலும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். அவரின் துடுப்பாட்டமும் வெற்றிக்கு கைகொடுத்தது.

இங்கிலாந்து அணி 40.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 215 ஓட்டங்களை பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்த்தான் அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 284 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை இங்கிலாந்து அணி தெரிவு செய்தது. அவர்கள் எதிர்பார்த்தது போன்று இரண்டாவதாக துடுப்பாடி ஓட்டங்களை பெறலாம் என்ற எதிர்பார்ப்பு பிழைத்துப் போனது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹுமனுள்ள குர்பாஸ் சிறந்த அதிரடி ஆரம்பத்தை வழங்கினார். ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் 16.4 ஓவர்களில் 114. இப்ராஹிம் ஷர்டான் 28 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். குர்பாஸ் மூன்றாவது விக்கெட்டாக 57 பந்துகளில் 80 ஓட்டங்களை பெற்று ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அதன் பின்னரே இங்கிலாந்து அணி பக்கமாக போட்டி மாறியது. இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை கைப்பற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு தடுமாற்றம் ஆரம்பித்தது.

மத்தியவரிசை பெரியளவில் சோபிக்கவில்லை. இறுதி நேரத்தில் களமிறங்கிய ரஷீட் கான் அதிரடியாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையை சிறிதளவில் உயர்திக் கொடுத்து ஆட்டமிழந்ததை தொடர்ந்து துடுப்பாட வந்த முஜீப் உர் ரஹ்மான் ஓட்டங்களைக்குவித்து ஆப்கானிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்திக் கொடுத்தார். இக்ரம் அலிகில் நிதானமாகவும், அதிரடியாகவும் துடுப்பாடி அவருடைய அரைச்சதத்தை பூர்த்தி செய்து கொண்டார். இறுதி நேரத்தில் பின் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக துடுப்பாடி ஆப்கானிஸ்தான் அணிக்கு வலுவான ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக் கொடுத்தனர்.

உலகக்கிண்ணத்தில் ஆப்கானிஸ்தான் அணி பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும். இதற்கு முதலில் ஸ்கொட்லாந்து அணையை மட்டுமே வென்றுள்ளது. இது அவர்களது பதினாறாவது உலகக்கிண்ண போட்டியாகும். இங்கிலாந்து அணிக்கெதிராக முதலாவது வெற்றியாகவும் இது பதிவாகியுள்ளது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ஜொனி பார்ஸ்டோவ்L.B.Wபஷால்ஹக் பரூக்கி020400
டாவிட் மலான்பிடி –  இப்ராஹிம் ஷர்டான்மொஹமட் நபி323940
ஜோ ரூட்Bowledமுஜீப் உர் ரஹ்மான்111720
ஜோஸ் பட்லர்Bowledநவீன் உல் ஹக்091810
ஹரி புரூக்பிடி – இக்ரம் அலிகில்   முஜீப் உர் ரஹ்மான்666171
லியாம் லிவிங்ஸ்டன்L.B.Wரஷீட் கான்101410
சாம் கரன்பிடி – ரஹ்மத் ஷாமொஹமட் நபி102300
கிறிஸ் வோக்ஸ்Bowledமுஜீப் உர் ரஹ்மான்092610
ஆடில் ரஷிட்பிடி – மொஹமட் நபிரஷீட் கான்201220
மார்க் வூட் ரஷீட் கான்182030
ரீஸ் ரொப்லி  150730
உதிரிகள்  13   
ஓவர்  40.3விக்கெட்  10மொத்தம்215   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
முஜீப் உர் ரஹ்மான்10015103
பஷால்ஹக் பரூக்கி07005001
நவீன் உல் ஹக்06014401
மொஹமட் நபி06001602
ரஷீட் கான்9.3013703
அஸ்மதுல்லா ஓமர்சாய்02001300
     
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரஹ்மனுல்லா குர்பாஸ்Run Out 805784
இப்ராஹிம் ஷர்டான்பிடி – ஜோ ரூட்ஆடில் ரஷிட்284830
ரஹ்மத் ஷாStump – ஜோஸ் பட்லர்ஆடில் ரஷிட்030800
ஹஷ்மதுல்லா ஷஹிதிBowledஜோ ரூட்143600
அஸ்மதுல்லா ஓமர்சாய்பிடி – கிறிஸ் வோக்ஸ்லியாம் லிவிங்ஸ்டன்192411
இக்ரம்  அலிகில்  பிடி – சாம் கரன்ரீஸ் ரொப்லி586632
மொஹமட் நபிபிடி – ஜோ ரூட்மார்க் வூட்091510
ரஷீட் கான்பிடி – ஜோ ரூட்ஆடில் ரஷிட்232230
முஜீப் உர் ரஹ்மான்பிடி – ஜோ ரூட்மார்க் வூட்286031
நவீன் உல் ஹக்Run Out 050610
பஷால்ஹக் பரூக்கி      020400
உதிரிகள்  15   
ஓவர்  49.5விக்கெட்  10மொத்தம்284   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
கிறிஸ் வோக்ஸ்04004100
ரீஸ் ரொப்லி8.5015201
சாம் கரன்04004600
ஆடில் ரஷிட்10014203
மார்க் வூட்09005002
லியாம் லிவிங்ஸ்டன்10003301
ஜோ ரூட்04001901
அணி  போவெதோச/ கைபுஓட்ட சராசரி வேகம்
இந்தியா03030000061.841
நியூசிலாந்து03030000061.604
தென்னாபிரிக்கா02020000042.360
பாகிஸ்தான்0302010004-0.137
இங்கிலாந்து0301020002-0.084
ஆப்கானிஸ்தான்0301020002-0.652
பங்களாதேஷ்0301020002-0.699
இலங்கை0200020000-1.161
நெதர்லாந்து0200020000-1.800
அவுஸ்திரேலியா0200020000-1.846
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version