ஒரே பிரசவத்தில் 6 ஆண் குழந்தைகள்!

கொழும்பு காஸல் வீதி மகளிர் மருத்துவமனையில் இன்று (17.10) ஆறு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.

இராகமையைச் சேர்ந்த பெண் ஒருவரே ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தாயும் பிள்ளைகளும் நலமுடன் இருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடைசியாக 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளின் பிறப்பு பதிவாகியுள்ளதுடன், அப்பிரசவத்தின் போது மூன்று ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version