தென்னாபிரிக்கா நெதர்லாந்து போட்டி ஆரம்பம் – (Update)

தென்னாபிரிக்கா நெதர்லாந்து போட்டி ஆரம்பம் - (Update)

மழை காரணமாக தாமதமாக ஆரம்பித்த போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதினைந்தாவது போட்டி ஆரம்பித்துள்ளது. இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேச தர்மசாலா மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள தென்னாபிரிக்கா அணி 4 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தில் காணப்படுகிறது. இன்று வெற்றி பெற்றால் முதலிடத்தை பெறும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

நெதர்லாந்து விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளே விளையாடிய போட்டிகள் இரண்டிலும் தோல்விகளை சந்தித்துள்ளன.

அணி விபரம்

தென்னாபிரிக்கா அணி: ரெம்பா பவுமா (தலைவர்), குயின்டன் டி கொக், மார்கோ ஜனேசன், ஹெய்ன்ரிச் கிளாசன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ககிசோ ரபாடா, ரஷி வன் டேர் டுசென், ஜெரால்ட் கோட்ஸிலி

ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (தலைவர்), மக்ஸ் ஓ டொவ்ட், பஸ் ட லீட், விக்ரம் சிங், தேஜா நிடமனுரு, போல் வான் மீகெரென், கொலின் அக்கர்மன், ரோலோஃப் வன் டெர் மேர்வ், லோகன் வன் பீக், ஆர்யன் டட், சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version