”பண்ணைகளை இந்தியாவிற்கு விற்க அரசாங்கம் திட்டமிடுகிறது” – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு!

முழு பங்குகளும் அரசுக்குரிய MILCO நிறுவனம் மற்றும் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பண்ணைகள் தற்போது இந்திய அமுல் (Amul) நிறுவனத்துடன் ஒருங்கிணைந்த கூட்டு நிறுவனமாக நிறுவ அரசாங்கம் தயாராகி வருவதாகவும், இந்நிறுவனத்தின் வளங்கள் மூலம் அதிகபட்ச உற்பத்தித் திறனை அடைய அரச நிர்வாகம் தவறியுள்ள தருணத்தில், பொருத்தமான பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியை அடையாளம் காணாமல், பல அரச முயற்சியாண்மைகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்வதன் மூலம், இந்நாட்டில் பொது வளங்கள் சரியான மதிப்பீடு இல்லாமல் குறைவாக மதிப்பிடப்பட்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கை மாற்றுவதும், மோசடி மற்றும் ஊழலுக்கு இடம் கொடுப்பதும் நடந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதனால் அந்நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணி ரீதியிலான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும், கடந்த காலங்களில் அரசாங்கம் இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது தோல்வியடைந்துள்ள சூழ்நிலையில், இந்நிறுவன கட்டமைப்பு நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

மில்கோ நிறுவனம் மற்றும் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பண்ணைகளை இந்தியாவிற்கு விற்பனை செய்வது தொடர்பில் நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் அரசாங்கத்திடம் இன்று (17.10) கேள்வி எழுப்பிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அரசாங்கத்திற்கு முன் பின் முரணான கருத்துக்கள் உள்ளன என்றும்,இவ்வாறு விற்பனை செய்ய முயல்வது கொழும்பு பால் நிறுவனம், அம்பேவெல ஸ்பிரே டை தொழிற்சாலை, திகன பால் தொழிற்சாலை,பொலன்னறுவை தொழிற்சாலை மற்றும் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான 30க்கும் மேற்பட்ட பண்ணைகள் என்றும்,நாட்டை விற்றுக்கொண்டிருக்கும் சுபீட்சத்தின் தொலைநோக்கு ஆணையை அமுல்படுத்துவதாக இதனைக் கருதலாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை பாதுகாத்து, பொது வளங்களின் தேசிய உரிமையை உறுதி செய்து, இந்நிறுவனங்களை பராமரிக்க புதிய வெளிப்படையான முறைமைகளை பின்பற்ற முடியுமாக இருந்தும், இங்கு இவ்வாறான ஒன்றை காண கிடைக்கவில்லை என்றும், ஒருமுறை தோல்வியடைந்த அமுல்-ஸ்ரீலங்கா கூட்டு முயற்சி,இந்த முறை எவ்வாறு வெற்றி பெறுவது என்பதை விளங்க அரச தரப்பில் இருந்து வெளிப்படையான கலந்துரையாடல் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொழிற்சங்கங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் வினவிய போது, ஜனாதிபதி செயலகத்தினால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தில் தான் கையொப்பமிட்டதாக சம்பந்தப்பட்ட விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார் என்றும், இது தொடர்பாக குறித்த அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்,உள்நாட்டு பாலை வைத்து நாடு தன்னிறைவு அடையும் என்று எல்லா மேடைகளிலும் பேசப்பட்டாலும், தற்போது இந்த பண்ணைகளை விற்பதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் மேலும் அவர் தெரிவித்தார்.

வலையொளி இணைப்பு-

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version