பொலிஸாரின் தவறான நடத்தைகள் தொடர்பாக பொதுமக்கள் முறைப்பாடு செய்ய, பொதுப் பாதுகாப்பு அமைச்சு, புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், 118 அவசர அவசர தொலைபேசிப் பிரிவு பொது பாதுகாப்பு அமைச்சினால் செயற்படுத்தப்படும் விசேட பிரிவாகும். இந்த இலக்கத்தின் ஊடாக நாட்டிற்குள் நடைபெறும் பல்வேறு குற்றச் செயல்கள், போதைப் பொருள்கள் போன்றவற்றைப் பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு வர முடியும்.
மேலும், காவல்துறை அதிகாரிகளின் முறைகேடுகள் தொடர்பாக அவர்களுக்கு எதிரான புகார்களையும் இந்த 118 என்ற தொலைபேசி எண்ணின் மூலம் தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புகாரளிக்க விரும்புவார்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தியோ அல்லது அநாமதேயமாகவோ தகவல்களை வழங்க முடியும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கம் 24 மணி நேரமும் செலவில் இருக்கும் எனவும், அழைப்பின் மூலம் வழங்கப்படும் தகவல்களின் ரகசியம் பேணப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.