இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தோனியுடன் விளம்பர படம் ஒன்றுக்காக இயக்குநர் விக்னேஷ் சிவன், இணைந்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக இருக்கும் விக்னேஷ் சிவன், தோனி மற்றும் யோகி பாபு நடிக்கும் விளம்பர படம் ஒன்றை இயக்கி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பான புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதுடன், இதனை தோணி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.