நெதர்லாந்து சிறந்த துடுப்பாட்டம்

தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதினைந்தாவது போட்டி, இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேச தர்மசாலா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி களத்தடுப்பைதெரிவு செய்தது. மழை காரணமாக 43 ஓவர்களாக போட்டி மாற்றப்பட்டது. நெதர்லாந்து அணி சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஆரம்ப விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட்ட நிலையிலும் இறுதி நேர துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக துடுப்பாடி இந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற்றனர். குறிப்பாக அணியின் தலைவர் ஸ்கொட் எட்வெர்ட்ஸ் ஏழாமிலக்கத்தில் சிறப்பாக துடுப்பாடி 78 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். சராசரியான இணைப்பாட்டஙகள் மூலம் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. எட்டாவது விக்கெட் இணைப்பாட்டம் 64 ஓட்டங்களையும், ஒன்பதாவது விக்கெட் இணைப்பாட்டம் முறியடிக்கப்படாத 41 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தது.

தென்னாபிரிக்கா அணி சார்பாக மார்க்கோ ஜனேசன் இறுக்கமாக பந்துவீசினார். கேஷவ் மஹாராஜ் ஓட்டங்களை அதிகமாக வழங்கவில்லை. ஏனையவர்கள் விக்கெட்களை கைப்பற்றிய போதும் ஓட்டங்களை அதிகமாக வழங்கியிருந்தனர்.

இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள தென்னாபிரிக்கா அணி 4 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தில் காணப்படுகிறது. இன்று வெற்றி பெற்றால் முதலிடத்தை பெறும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

நெதர்லாந்து விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளே விளையாடிய போட்டிகள் இரண்டிலும் தோல்விகளை சந்தித்துள்ளன.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
விக்ரம் சிங்பிடி –  ஹெய்ன்ரிச் கிளாசன்ககிசோ ரபாடா021600
மக்ஸ் ஓ டொவ்ட்பிடி – குயின்டன் டி கொக்மார்கோ ஜனேசன்182540
கொலின் அக்கர்மன்Bowledஜெரால்ட் கோட்ஸிலி122510
பஸ் டி லீட்L.B.Wககிசோ ரபாடா020700
சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட்பிடி – மார்கோ ஜனேசன்லுங்கி நிகிடி193711
தேஜா நிடமனுருL.B.Wமார்கோ ஜனேசன்202530
ஸ்கொட் எட்வேர்ட்ஸ்  7869101
லோகன் வன் பீக்Stump – குயின்டன் டி கொக்கேசவ் மகராஜ்102710
ரோலோஃப் வன் டெர் மேர்வ்பிடி – குயின்டன் டி கொக்லுங்கி நிகிடி291931
ஆர்யன் டட்  230903
       
உதிரிகள்  32   
ஓவர்  43விக்கெட்  08மொத்தம்245   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
லுங்கி நிகிடி09015702
மார்கோ ஜனேசன்08012702
ககிசோ ரபாடா09015602
ஜெரால்ட் கோட்ஸிலி08005701
கேசவ் மகராஜ்09003801

அணி விபரம்

ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (தலைவர்), மக்ஸ் ஓ டொவ்ட், பஸ் டி லீட், விக்ரம் சிங், தேஜா நிடமனுரு, போல் வான் மீகெரென், கொலின் அக்கர்மன், ரோலோஃப் வன் டெர் மேர்வ், லோகன் வன் பீக், ஆர்யன் டட், ஷகிப் சுல்பிகார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version