போராடக்கூடிய நிலையில் நியூசிலாந்து

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதினாறாவது போட்டி இந்தியா, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இன்று முதல் குழு நிலைப்போட்டிகளின் நான்காம் கட்டம் ஆரம்பமாகிறது. சகல அணிகளும் தலா மூன்று போட்டிகளை பூர்த்தி செய்துள்ளன.

ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை வென்றுள்ள நிலையிலில் இன்றைய போட்டி விறு விறுப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளில் 1 வெற்றியினை தனதாக்கியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

நியூசிலாந்து ஆரம்ப விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்டது. வில் ஜங், ரச்சின் ரவீந்திரா 79 ஓட்டங்களை இருவரும் இணைப்பாட்டமாக பகிர்ந்ததோடு அணியின் ஓட்ட எண்ணிக்கையை சிறிதளவு உயர்திக்கொடுத்தனர். ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்ததை தொடர்ந்து அடுத்த இரு விக்கெட்களும் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன. க்ளன் பிலிப்ஸ், டொம் லெதாம் ஆகியோர் நிதானமாக துடுப்பாடி 144 ஓட்டங்களை இணைப்பாட்டமாக இருவரும் பகிர்ந்து கொண்டதுடன் இருவரும் அவர்களின் அரைச்சதங்களை பூர்த்தி செய்துகொண்டனர். இதன் மூலமாக நியூசிலாந்து அணிக்கு போராடக்கூடிய நிலை உருவாகியது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
டெவோன் கொன்வேL.B.Wமுஜீப் உர் ரஹ்மான்201830
வில் ஜங்பிடி – இக்ரம் அலிகில்  அஸ்மதுல்லா ஓமர்சாய்546443
ரச்சின் ரவீந்திரBOWLEDஅஸ்மதுல்லா ஓமர்சாய்324121
டெரில் மிட்செல்பிடி – இப்ராஹிம் ஷர்டான்ரஷீட் கான்010700
ரொம் லதாம்BOWLEDநவீன் உல் ஹக்687432
கிளென் பிலிப்ஸ்பிடி – ரஷீட் கான்நவீன் உல் ஹக்718044
மார்க் சப்மன்   2512 
மிட்செல் சென்ட்னர்   0705 
      
       
       
உதிரிகள்  10   
ஓவர்  50விக்கெட்  06மொத்தம்288   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்விக்
முஜீப் உர் ரஹ்மான்10005701
பஷால்ஹக் பரூக்கி07013900
நவீன் உல் ஹக் 0800  48 02
மொஹமட் நபி08014101
ரஷீட் கான்10004301
அஸ்மதுல்லா ஓமர்சாய்07005602
     

அணி விபரம்

ஆப்கானிஸ்தான் அணி: ஹஷ்மதுல்லா ஷஹிதி (தலைவர்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஷர்டான், ரஹ்மத் ஷா சுர்மதி, மொஹமட் நபி , எய்சகில், அஸ்மதுல்லா ஓமர்சாய், ரஷீட் கான்,முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக் முரீத், பஷால்ஹக் பரூக்கி,இக்ரம் அலிகில்

நியூசிலாந்து அணி: வில் ஜங், டிரென்ட் போல்ட், மார்க் சப்மன், டெவோன் கொன்வே, லூக்கி பெர்குசன், மட் ஹென்றி, ரொம் லெதாம்(தலைவர்), டெரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சென்ட்னர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version