பதுளையில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 18 பேர் காயம்!

பதுளை – மொரஹெல பிரதான வீதியில் உல்பத சந்தி என்ற இடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று சுமார் 40 அடி உயரத்திலிருந்து கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (20.10) இடம்பெற்ற இந்த விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

மீகஹகிவுலவில் இருந்து மொரஹெல நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் தற்போது மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் உள்ள 8 பேர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மீகஹகிவுல பிரதேசத்தில் இன்று வாராந்த சந்தை இடம்பெறுவதால் இந்த பேருந்தில் பெருமளவான மக்கள் பயணித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version