மீண்டும் அதிகரிக்கும் லிட்ரோ எரிவாயு?

லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் விலை திருத்தத்தின் போது 12.5 கிலோகிராம் வீட்டு சிலிண்டரின் விலை 200 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலை சூத்திரத்தின்படி, அடுத்த எரிவாயு விலை திருத்தம் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ம் திகதி நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

லிட்ரோ நிறுவனம் இம்மாதம் 5ம் திகதி நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 343 ரூபாவினால் அதிகரித்திருந்தது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version