பெண் பொலிஸ் அதிகாரியின் அதிரடி மனித நேய நடவடிக்கை

இந்தியா தமிழகத்தின், அண்ணா நகர் பகுதியில் மரத்தில் இருந்து வீழ்ந்த இளைஞனை அதிரடியாக காப்பாற்றிய அந்த பகுதி பொலிஸ் அத்தியட்சகர் ராஜேஸ்வரி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் பகிரப்பட்டு வருகின்றன.


மரத்தில் இருந்து வீழ்ந்த இளைஞன் இறந்துவிட்டான் என எண்ணிய வேளையில் அவருக்கு முதலுதவி செய்து அவரை லாவகமாக தனது தோளில் ஒரு நிமிடமளவில் தூக்கி வைத்துக்கொண்டு பின்னர் முச்சக்கர வண்டியில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.


அங்கே சில ஆண்கள் இருந்த போதும் யாரிடமம் சொல்லாமல் தானே செயற்பட்ட விதம் போற்றப்பபடவேண்டியது. ஒரு பொலிஸ் அதிகாரி இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதற்கு பொலிஸ் அத்தியட்சகர் ராஜேஸ்வரி நல்லதொரு முன்னுதரணம். அவருக்கு ஒரு சலூட்.

பெண் பொலிஸ் அதிகாரியின் அதிரடி மனித நேய நடவடிக்கை
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version