இலங்கை 19 வயதிற்குட்பட்ட மற்றும் பாகிஸ்தான் 19 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையில் நேற்று (22.10) இளைஞர்களின் முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டி கராச்சியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி 58 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 309 ஓட்டங்களை பெற்றது. இதில் புலிந்து பெரேரா 156(96) ஓட்டங்களையும், ரவிஷன் டி சில்வா 30(74) ஓட்டங்களையும், ஷாருஜன் சண்முகநாதன் ஆட்டமிழக்காமல் 24(31) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நவீட் அஹமட் கான் 3 விக்கெட்களையும், அரபத் மின்ஹாஸ், மொஹமட் இப்பிடிசாம், அஹமட் ஹுசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 45.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 251 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷமில் ஹொசைன் 98(120) ஓட்டங்களையும், அரபத் மின்ஹாஸ் 84(73) ஓட்டங்களையும் பெற்றனர். டினுற கலுபஹான 4 விக்கெட்களையும், கருக சங்கெத் 3 விக்கெட்களையும், ருவிஷன் பெரேரா 2விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். விக்கெட் காப்பாளர் ஷாருஜன் சண்முகநாதன் 2 பிடிகள் எடுத்துள்ளார்.