
அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி உலககிண்ணத்தொடரின் 24 ஆவது போட்டியாக இன்று (25.10) டெல்லியில் ஆரம்பித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அவுஸ்திரேலியா அணி விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றிகள் 2 தோல்விகள் என்ற நிலையில் நான்காம் இடத்திலும், நெதர்லாந்து அணி விளையாடிய 4 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றியையும் 3 தோல்விகளையும் பெற்ற நிலையில் ஏழாமிடத்திலும் காணப்படுகின்றன.
அவுஸ்திரேலியா அணி ஒரு மாற்றத்தோடு விளையாடுகிறது. மார்கஸ் ஸ்ரோய்னிஸிற்கு பதிலாக கமரூன் கிரீன் விளையாடுகிறார்.
அணி விபரம்
அவுஸ்திரேலியா அணி: பட் கம்மின்ஸ்(தலைவர்) ,டேவிட் வோர்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், மிற்செல் மார்ஷ், க்ளன் மக்ஸ்வெல், கமரூன் கிரீன் , ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஸல்வூட், அடம் ஷம்பா
நெதர்லாந்து அணி – ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (தலைவர்), மக்ஸ் ஓ டொவ்ட், பஸ் ட லீட், விக்ரம் சிங், தேஜா நிடமனுரு, போல் வன் மீகெரென், கொலின் அக்கர்மன், ரோலோஃப் வன் டெர் மேர்வ், லோகன் வன் பீக், ஆர்யன் டட், சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட்
புள்ளிப்பட்டியல்
| அணி | போ | வெ | தோ | ச/ கை | பு | ஓட்ட சராசரி வேகம் |
| இந்தியா | 05 | 05 | 00 | 00 | 10 | 1.353 |
| தென்னாபிரிக்கா | 05 | 04 | 01 | 00 | 08 | 2.370 |
| நியூசிலாந்து | 05 | 04 | 01 | 00 | 08 | 1.481 |
| அவுஸ்திரேலியா | 04 | 02 | 02 | 00 | 04 | -0.193 |
| பாகிஸ்தான் | 05 | 02 | 03 | 00 | 04 | -0.456 |
| ஆப்கானிஸ்தான் | 05 | 02 | 03 | 00 | 04 | -1.250 |
| நெதர்லாந்து | 04 | 01 | 03 | 00 | 02 | -0.790 |
| இலங்கை | 04 | 01 | 03 | 00 | 02 | -1.048 |
| இங்கிலாந்து | 04 | 01 | 02 | 00 | 02 | -1.248 |
| பங்களாதேஷ் | 05 | 01 | 04 | 00 | 02 | -1.253 |