கடல் எல்லையை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட கல்பிட்டி மற்றும் கந்தகுளி பிரதேசத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள், அவர்கள் பயணித்த படகுகளுடன் இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து இந்திய கடற்பரப்பிற்குள் பிரவேசித்த கல்பிட்டி மற்றும் கந்தகுளி பிரதேசங்களை சேர்ந்த 8 மீனவர்களை கைது செய்துள்ளதுடன் 4 சிறிய மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கந்தகுளி வி.எஸ்.எம்.பெர்னாண்டோ, ஈச்சங்கடுவ வி.ஏ.ஜூட் மல்சன் பெர்னாண்டோ, கந்தகுளி வி.பி.ரங்க குமார் மீன்பிடி கிராமமான கந்தளிய, சில்வெஸ்டர் குரூஸ் கந்தகுளிய, எச்.டி.ஆர் டயஸ் வன்னிமுண்டலம், கே.கே.டபிள்யூ.பெர்னாண்டோ, எச்.ஆர்.வல்லியாவத்தை, ஆகியோரே இந்திய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .