வரவு – செலவு திட்டம் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

இலங்கையின் 76ஆவது வரவு செலவு திட்டத்தை நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ இன்று (12/11) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

கொவிட் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தாலும், மக்கள் இம்முறை வரவு – செலவு திட்டத்தை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.

அதற்கமைய அமைச்சர் பஸில் ராஜபக்ஷ பிற்பகல் 2 மணிக்கு வரவு – செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இது இந்த அரசின் இரண்டாவது வரவு – செலவு திட்டம் என்பதுடன் இதற்கிடையில், இந்த ஆண்டுக்கான நிதி திட்டத்தில் கல்விக்காக 7.51 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

26 ஆண்டுகளாக நிலவி வந்த ஆசிரியர் – அதிபர் மோதலுக்கு தீர்வு காண்பதுடன், இது ஒரு வரலாற்று நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது. இதற்காக 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

வரவு – செலவு திட்டம் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version