‘உதவும் கரங்கள்’ நலத்திட்டங்கள்

இரத்தினபுரி மாவட்டத்தின் உதவும் கரங்கள் அமைப்பின் நவம்பர் மாதத்திற்கான தொடர் மக்கள் நலத்திட்ட பணிகள் மாத்தறை மாவட்டம், இரத்தினபுரி மாவட்டம், நுவரெலியா மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன.

கேகாலை மாவட்டத்தில் ஆரம்பமாகிய இந்த வேலைத்திட்டம் கடந்த 4ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில், நவம்பர் 13ஆம் திகதி ஹப்புகஸ்தென்ன தோட்ட வைத்தியசாலைக்கு சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான பாதுகாப்பு வேலி நிர்மாண பணிக்கான பொருட்களைக் கையளித்தல், இறக்குவானை இ.எம்.பி ஃஸ்பிரிங்வூட் தமிழ் வித்தியாலயத்திற்கு வெண் பலகைகள் வழங்கும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து கஹவத்தை ஒபாத்தை இலக்கம் 2 தமிழ் வித்தியாலயத்திற்கு குடிநீர் விநியோக திட்டத்தை திறந்து வைத்தல் ஆகியன முன்னெடுக்கப்படவுள்ளன.

அதேவேளை 14ஆம் திகதி லிந்துலை பிரதேசத்தில் வாழும் மாற்று திறனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலி உலர் உணவு பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்படவுள்ளதோடு, ஹட்டனில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்திற்கு பகல் உணவு வழங்கப்படவுள்ளது. நோர்வூட் மேல் பிரிவில் வசிக்கு இளம் வயதுடைய மாற்று திறனாளி ஒருவருக்கு ஊன்றுகோல், உலர் உணவுபொருட்களும், வட்டவளையைச் சேர்ந்த மாற்று திறனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலியும் வழங்கி வைக்கப்படவுள்ளது.

அந்தவகையில் உதவும் கரங்கள் அமைப்போடு சகலரும் கரங்கோத்து பயணிப்பதற்காக குறித்த அமைப்பினால் பொது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

'உதவும் கரங்கள்' நலத்திட்டங்கள்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version