குடிபோதையில் வாகனம் செலுத்தி, பொலிஸார் தடுத்து நிறுத்தியபோது, பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திம்புலாகல பிரதேச சபையின் மொட்டு கட்சி வேட்பாளர் குஷான் உமயங்கன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இவர் மீது பொலிஸாரை அறைந்த குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த வாக்குவாதத்தின்போது பொலிஸார் தம்மை தாக்கியதாக தெரிவித்து, பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கோரி, பலவந்தமாக வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
தாம் குடிபோதையில் வாகனம் செலுத்தவில்லை என தொடர்ந்தும் வாதாடியுள்ளபோதிலும், வைத்தியசாலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர் மது அருந்தியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.