இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 30 ஆவது போட்டியாக பூனேயில் இன்று (30.10) நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
இலங்கை அணியின் முதல் விக்கெட் வீழ்ந்தவுடன் 2 விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த பத்தும் நிசங்க மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் 62 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். பத்தும் நிசங்க ஆட்டமிழந்தவுடன் சதீர சமரவிக்ரம, குஷால் மென்டிஸ் ஆகியோர் 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். குசல் மென்டிஸ் ஆட்டமிழந்ததுடன் சம இடைவெளிகளில் விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. ஆப்கானிஸ்தான் அணியின் அபாரமான பந்துவீச்சு மற்றும் சிறந்த களத்தடுப்பு மூலமாகவே இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையினை கட்டுப்படுத்த முடிந்தது. இலங்கை அணி தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் 8 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த அஞ்சலோ மத்தியூஸ், மஹீஸ் தீக்ஷண ஆகியோர் 45 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்திக்கொடுத்தனர்.
இலங்கை அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் 241 இழந்து ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சிறப்பாக பந்துவீசாமல் விட்டால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறுவது இலகுவாகிவிடும்.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
பத்தும் நிஸ்ஸங்க | பிடி- ரஹ்மனுல்லா குர்பாஸ் | அஸ்மதுல்லா ஓமர்சாய் | 46 | 60 | 5 | 0 |
திமுத் கருணாரட்ன | L.B.W | பசல்ஹக் பரூக்கி | 15 | 21 | 1 | 0 |
குஷல் மென்டிஸ் | பிடி- நஜிபுல்லா சட்ரன் | முஜீப் உர் ரஹ்மான் | 39 | 50 | 3 | 0 |
சதீர சமரவிக்ரம | L.B.W | முஜீப் உர் ரஹ்மான் | 36 | 40 | 3 | 0 |
சரித் அசலங்க | பிடி- ரஷீட் கான் | பசல்ஹக் பரூக்கி | 22 | 28 | 2 | 0 |
தனஞ்சய டி சில்வா | Bowled | ரஷீட் கான் | 14 | 26 | 1 | 0 |
அஞ்சலோ மத்தியூஸ் | பிடி- மொஹமட் நபி | பசல்ஹக் பரூக்கி | 23 | 26 | 1 | 1 |
துஷ்மந்த சமீர | Run Out | 01 | 04 | 0 | 0 | |
மஹீஸ் தீக்ஷண | Bowled | பசல்ஹக் பரூக்கி | 29 | 31 | 3 | 1 |
கஸூன் ரஜித | Run Out | 05 | 07 | 0 | 0 | |
டில்ஷான் மதுஷங்க | 00 | 04 | 0 | 0 | ||
உதிரிகள் | 11 | |||||
ஓவர் 49.3 | விக்கெட் 10 | மொத்தம் | 241 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
முஜீப் உர் ரஹ்மான் | 10 | 00 | 38 | 02 |
பசல்ஹக் பரூக்கி | 10 | 01 | 34 | 04 |
நவீன் உல் ஹக் | 6.3 | 00 | 47 | 00 |
அஸ்மதுல்லா ஓமர்சாய் | 07 | 00 | 37 | 01 |
ரஷீட் கான் | 10 | 00 | 50 | 01 |
மொஹமட் நபி | 06 | 00 | 33 | 00 |
இலங்கை அணி விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 3 தோல்விகளுடன் ஐந்தாம் இடத்திலும் ஆப்கானிஸ்தான் அணியும் 5 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 3 தோல்விகளுடன் ஏழாமிடத்திலும் காணப்படுகின்றன.
இலங்கை அணி இரண்டு மாற்றங்களுடன் இன்று விளையாடுகிறது. குசல் பெரேராவிற்கு பதிலாக திமுத் கருணாரட்னவும் லஹிரு குமார உபாதை அடைந்த காரணத்தால் அவருக்கு பதிலாக துஷ்மந்த சமீரவும் விளையாடுகினறனர். ஆப்கானிஸ்தான் அணி ஒரு மாற்றத்தோடு விளையாடுகிறது. நூர் அஹமட்டிற்கு பதிலாக பசல்ஹக் பரூக்கி மீண்டும் அணிக்குள் வந்திருக்கிறார்.
அணி விபரம்
இலங்கை அணி: குஷல் மென்டிஸ்(தலைவர்), திமுத் கருணாரட்ன, பத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, மஹீஸ் தீக்ஷண, டில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமீர, கஸூன் ரஜித
ஆப்கானிஸ்தான் அணி: ஹஷ்மதுல்லா ஷஹிதி (தலைவர்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஷர்டான், இக்ரம் அலிகில், ரஹ்மத் ஷா, மொஹமட் நபி, அஸ்மதுல்லா ஓமர்சாய், ரஷீட் கான்,முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், பசல்ஹக் பரூக்கி