தென்னாபிரிக்கா, நியூசிலாந்து போட்டி ஆரம்பம்

தென்னாபிரிக்கா, நியூசிலாந்து போட்டி ஆரம்பம்

தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 32ஆவது போட்டி இந்தியா, பூனே மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.

நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது.

தென்னாபிரிக்கா அணி 6 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்று 10 புள்ளிகளோடு இரண்டாமிடத்தில் காணப்படுகிறது. நியூசிலாந்து அணி 6 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்று 8 புள்ளிகளோடு மூன்றாமிடத்தில் காணப்படுகிறது.

இன்றைய போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றால் முதலிடத்தை பெற்றுக் கொள்ளும். தோல்வியடைந்தால் இரு அணிகளில் ஒரு அணி ஓட்ட நிகர சராசரி வேகத்தின் அடிப்படையில் இரண்டாமிடத்தை தனதாக்கும்.

அணி விபரம்

நியூசிலாந்து அணி: வில் ஜங், டிரென்ட் போல்ட், ஜேம்ஸ் நீஷாம், டெவோன் கொன்வே, டிம் சௌதி, மட் ஹென்றி, ரொம் லெதாம்(தலைவர்), டெரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சென்ட்னர்

தென்னாபிரிக்கா அணி: ரெம்பா பவுமா(தலைவர்), குயின்டன் டி கொக், மார்கோ ஜனேசன், ஹெய்ன்ரிச் கிளாசன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ரஷி வன் டேர் டுசென், ஜெரால்ட் கோட்ஸிலி, ககிஸோ ரபாடா

அணி  போவெதோச/ கைபுஓட்ட சராசரி வேகம்
இந்தியா06060000121.405
தென்னாபிரிக்கா06050100102.032
நியூசிலாந்து06040200081.232
அவுஸ்திரேலியா06040200080.970
பாகிஸ்தான்0703040006-0.024
ஆப்கானிஸ்தான்0603030006-0.718
இலங்கை0602040004-0.275
நெதர்லாந்து0602040004-1.277
பங்களாதேஷ்0701060002-1.446
இங்கிலாந்து0601050002-1.652
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version