தினேஷ் ஷாப்டரின் மரணதிற்கான காரணம் வெளியானது!

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளரான தினேஷ் ஷாப்டரின் மரணதிற்கான காரணத்தை கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜிந்து ஜயசூரிய வெளியிட்டுள்ளார்.

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளரான வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகம் அழுத்தப்பட்டதன் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜிந்து ஜயசூரிய இன்று (01.11) தீர்ப்பளித்துள்ளார்.

இதன்படி, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மரண விசாரணையின்போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கைகள் என்பனவற்றை பரிசீலித்த பின்னரே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version