நியூசிலாந்திற்கு எதிராக தென்னாபிரிக்கா அதிரடி

நியூசிலாந்திற்கு எதிராக தென்னாபிரிக்கா அதிரடி

தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 32ஆவது போட்டி இந்தியா, பூனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது.

தென்னாபிரிக்கா அணியின் முதல் விக்கெட் இணைப்பாட்டம் ஓரளவு சிறப்பாக அமைந்தது. தென்னாபிரிக்கா அணியின் முதல் விக்கெட் வீழ்ந்தவுடன் ஜோடி சேந்த ரஷி வன் டேர் டுசென், குயின்டன் டி கொக் ஆகியோர் அதிரடியாக துடுப்பாடி 200 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டதுடன் குயின்டன் டி கொக் அவரது சதத்தை பூர்த்தி செய்து பிறகே ரஷி வன் டேர் டுசெனால் சதத்தை போர்த்தி செய்ய முடிந்தது. குயின்டன் டி கொக் இந்த உலககிண்ணத்தில் நான்காவது சதத்தையும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 21 ஆவது சதத்தையும் பூர்த்தி செய்துகொண்டார். ரஷி வன் டேர் டுசெனால் இந்த உலககிண்ணத்தில் இரண்டாவது சதத்தையும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் ஆறாவது சதத்தையும் பூர்த்தி செய்து கொண்டார். குயின்டன் டி கொக் ஆட்டமிழந்ததுடன் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர், ரஷி வன் டேர் டுசென் ஆகியோர் அதிரடியாக துடுப்பாடி ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். தென்னாபிரிக்கா உலககிண்ணத்தில் அதிக 6 ஓட்டங்களை அடித்த சாதனையை படைத்துள்ளது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் டிரென்ட் போல்ட் இறுக்கமாக பந்துவீசியிருந்தார். ஜேம்ஸ் நீஷாம் அவரது கையில் ஏற்பட்ட உபாதை காரணமாக ஒரு ஓவரை முழுமையாக பந்துவீச முடியாமல் போயிருந்தது. ஆனாலும் அவர் மீண்டும் பந்துவீசியிருந்தார்.

தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 357 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து அணியும் இந்த இலக்கை துரத்தியடிப்பதற்கு போராடும் வேண்டிய நிலை உருவாகும்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
குயின்டன் டி கொக்பிடி –  கிளென் பிலிப்ஸ்டிம் சௌதி114116103
ரெம்பா பவுமாபிடி – டெரில் மிட்செல்டிரென்ட் போல்ட்242841
ரஷி வன் டேர் டுசென்Bowledடிம் சௌதி13311895
டேவிட் மில்லர் பிடி – டெரில் மிட்செல் ஜேம்ஸ் நீஷாம் 53 30 4
ஹெய்ன்ரிச் கிளாசன்   15 07 1 1
எய்டன் மார்க்ரம்   06 01 0
      
      
      
      
      
உதிரிகள்  12   
ஓவர்  50விக்கெட்  04மொத்தம்357   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
டிரென்ட் போல்ட்10014901
மட் ஹென்றி5.3003100
டிம் சௌதி10007702
மிட்செல் சென்ட்னர்10005800
கிளென் பிலிப்ஸ்07005200
ரச்சின் ரவீந்திர02001700
ஜேம்ஸ் நீஷாம்5.3006901

தென்னாபிரிக்கா அணி 6 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்று 10 புள்ளிகளோடு இரண்டாமிடத்தில் காணப்படுகிறது. நியூசிலாந்து அணி 6 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்று 8 புள்ளிகளோடு மூன்றாமிடத்தில் காணப்படுகிறது.

இன்றைய போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றால் முதலிடத்தை பெற்றுக் கொள்ளும். தோல்வியடைந்தால் இரு அணிகளில் ஒரு அணி ஓட்ட நிகர சராசரி வேகத்தின் அடிப்படையில் இரண்டாமிடத்தை தனதாக்கும்.

அணி விபரம்

நியூசிலாந்து அணி: வில் ஜங், டிரென்ட் போல்ட், ஜேம்ஸ் நீஷாம், டெவோன் கொன்வே, டிம் சௌதி, மட் ஹென்றி, ரொம் லெதாம்(தலைவர்), டெரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சென்ட்னர்

தென்னாபிரிக்கா அணி: ரெம்பா பவுமா(தலைவர்), குயின்டன் டி கொக், மார்கோ ஜனேசன், ஹெய்ன்ரிச் கிளாசன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ரஷி வன் டேர் டுசென், ஜெரால்ட் கோட்ஸிலி, ககிஸோ ரபாடா

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version