ஒரு வருடத்திற்கு முன்னர் அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்கு கூட சிரமப்பட்ட நாட்டில், சம்பளம் அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சரியான தலைமைத்துவத்தின் கீழ் நாடு நல்ல பொருளாதாரத் திசையில் பயணிக்கிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்னர், சம்பளத்தை தவணை முறையில் வழங்குதல், உரிய திகதியை தாமதப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் பின்பற்ற வேண்டியிருந்தது. எவ்வாறாயினும், எவ்வாறு சம்பளம் வழங்குவது என்பது பற்றி அல்ல, ஆனால் எவ்வளவு சம்பளம் அதிகரிக்கப்படும் என்பது குறித்து விவாதம் நடைபெறும் அளவில் இப்போது மாற்றம் கண்டுள்ளது.