மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக திவுலப்பிட்டியில் இருந்து கொழும்பு வரை நடைபவனியை ஏற்பாடு செய்த தேரர் உட்பட 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திவுலபிட்டிய சந்தியில் இருந்து கொழும்பு வரையான இந்த பேரணியை மின்சார பாவனையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
எனினும், பேரணியின் ஆரம்பித்திலேயே, ஊர்வலத்தை நடத்தக் கூடாது என பொலிஸார் அறிவித்திருந்தனர்.
அங்கு பதற்றம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க உள்ளிட்ட குழுவினரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதன்படி அவர்கள் தற்போது திவுலபிட்டிய பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.