ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க போர் நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (01.11) காஸா பகுதியில் கடும் சண்டை இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, காஸா பகுதியில் சிக்கித் தவித்த வெளிநாட்டவர்களுக்கு நேற்று ரஃபா வாயில் ஊடாக எகிப்து செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவ்வழியினூடாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 400 பேரும், காயங்களிலான பலரும் எகிப்து நோக்கி அவதானிக்க கூடியதாக இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், காஸா பகுதியில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் ரஃபா வாசல் ஊடாக எகிப்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, காஸா பகுதியில் தங்கியுள்ள 15 இலங்கையர்கள் இன்று (02.11) பிற்பகல் ரஃபா கடவை ஊடாக எகிப்தை சென்றடைவார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.