பல வகையான உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி இந்த விளைத்த திருத்தும் இன்று (04.11) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
சீனியின் விலை அதிகரிப்பு காரணமாக தேநீரின் விலை 5 ரூபாவினாலும் பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரிசி, மரக்கறிகள், கோழி இறைச்சி மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக சாப்பிட்டு பொதி ஒன்றின் விலை 20 ரூபாவினாலும், கொத்து மற்றும் ரைஸ் இன் விலை 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.