இங்கிலாந்து, நெதர்லாந்து போட்டி ஆரம்பம்

இங்கிலாந்து, நெதர்லாந்து போட்டி ஆரம்பம்

இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 40 ஆவது போட்டி இன்று (08.11) பூனேயில் ஆரம்பித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

இங்கிலாந்து அணி விளையாடிய 7 போட்டிகளில் 1 வெற்றி 6 தோல்விகளுடன் இறுதியிடத்திலும் நெதர்லாந்து அணி விளையாடிய 7 போட்டிகளில் 2 வெற்றிகள் 5 தோல்விகளுடன் ஒன்பதாம் இடத்திலும் காணப்படுகின்றன.

இரு அணிகளும் அரை இறுதி வாய்ப்பை இழந்துள்ளன.

இங்கிலாந்து அணி இரு மாற்றங்களுடன் இன்று விளையாடுகிறது. லியாம் லிவிங்ஸ்டனிற்கு பதிலாக ஹரி புரூக்கும் மார்க் வூடிற்கு பதிலாக கஸ் அடிக்சனும் விளையாடுகின்றனர். நெதர்லாந்து அணி 1 மாற்றத்தோடு இன்று விளையாடுகிறது. ஷகிப் சுல்பிகரிற்கு பதிலாக தேஜா நிடமனுரு விளையாடுகிறார்.

அணி விபரம்

நெதர்லாந்து அணி – ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (தலைவர்), மக்ஸ் ஓ டொவ்ட், பஸ் ட லீடா, வெஸ்லி பரசி, தேஜா நிடமனுரு, போல் வன் மீகெரென், கொலின் அக்கர்மன், ரோலோஃப் வன் டெர் மேர்வ், லோகன் வன் பீக், ஆர்யன் டட், சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட்

இங்கிலாந்து அணி : ஜோஸ் பட்லர் (தலைவர்), ஜொனி பாஸ்டோ, டாவிட் மலான், ஜோ ரூட், பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ், ஹரி புரூக், மொயீன் அலி , டேவிட் வில்லி, ஆதில் ரஷீட், கஸ் அடிக்சன், கிறிஸ் வோக்ஸ்

அணி  போவெதோச/ கைபுஓட்ட சராசரி வேகம்
இந்தியா08080000162.456
தென்னாபிரிக்கா08060200121.376
அவுஸ்திரேலியா08060200120.861
நியூசிலாந்து08040400080.398
பாகிஸ்தான்08040400080.036
ஆப்கானிஸ்தான்0804040008-0.338
பங்களாதேஷ்0802060004-1.442
இலங்கை0802040004-1.160
நெதர்லாந்து0702050004-1.398
இங்கிலாந்து0701060002-1.504
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version