இலங்கை கிரிக்கெட் ஊழல் தொடர்பில் பாரளுமன்றத்தில் விவாதம் ஆரம்பம்

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் பாரளுமன்றத்தில் இன்று(09.11) விவாதம் ஆரம்பித்துள்ளது. இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாக சபையை நீக்குவது தொடர்பில் இன்று முழு நாளும் விவாதம் நடைபெற்று வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

கட்சி பேதங்களின்று 225 பாரளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் ஏற்பட்ட சிக்கல்களை தீர்க்க முன்வர வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள ஊழல்களை வெளிக்கொண்டு வரவேண்டும். ஊழல்வாதிகள் துரதியடிக்கப்படவேண்டும். கிராம மட்டம் வரை செல்ல வேண்டிய அபிவிருத்திக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதற்கு தொடர்ந்து அனுமதிக்க முடியாது எனவும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

ஊழல்வாதிககளை வெளியேற்றி, சுயாதீனமான விளையாட்டை, கிரிக்கெட்டை வளர்க்க சீரான பாதையில் கொண்டு செல்ல அனைவரும் இணைந்து செயற்படுவோம் என உறுதி மொழி எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி சார்பாக சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாக்குகள் மூலம் ஜனநாயக ரீதியில் தெரிவி செய்யப்பட்டவர்கள் தாம் என கூறிக்கொள்ளும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஊழல்வாதிகள் மாகாண மட்டம் முதல் வாக்கு உரிமை கொண்டவர்களை பணத்துக்கு விலை கொடுத்து வாங்கி வைத்துகொண்டு ஊழல் செய்துள்ளார்கள் எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளார்.

பாரளுமன்றத்தில் உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா “ஸ்ரீலங்கா கிரிக்கெட் தாமாக இராஜினாமா செய்து வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பிலும் பிழை யாரிடம் உள்ளது என விசாரிப்பது பாரளுமன்றத்தின் கடமையல்ல. ஆனால் மக்களுக்காக நாம் அனைவரும் இணைந்து இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் முன்னெடுத்துள்ளோம். ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஊழல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கு உரிய முறையொன்றை அறிமுகம் செய்ய வேண்டும். அமைச்சர் உட்பட்ட அரசியில் தலையிடுகள் அற்ற புதிய நிர்வாக முறை அறிமுகம் செய்ய வேண்டும். அதன் மூலமாகவே ஊழலற்ற அமைப்பை கொன்டு செல்ல முடியுமென அவர் மேலும் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இந்த விவாதம் ஆரம்பித்துள்ள வேளையில் 20 இலட்சம் அமெரிக்க டொலர்களை வங்கியிலிருந்து மீளப்பெற முயற்சிகள் நடைபெறுவதாக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாரளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார். இதனை தடுத்து நிறுத்த வேண்டுமென அவர் சபாநாயகருக்கு தெரிவித்துளளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version