அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரை சந்தித்தார் சாணக்கியன்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ்க்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று ( 09.11) இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் அவ் சந்திப்பில் போது சமகால அரசியல் தொடர்பாகவும் குறிப்பாக மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் காணப்படும் பிரச்சனைகள் தொடர்பான முழு விபரங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால மாநாடு தொடர்பாகவும், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவும் எமது நாட்டைப் போல் (Federal) கூட்டாச்சி அரசியல் அமைப்பைக் கொண்ட நாடாகும் மாநிலங்கள் போல் இங்கு மாகாணமாக காணப்படுகின்றது அங்கு மற்றைய நாடுகளை போல் அல்லாது இலங்கையை சேர்ந்த புலம்பெயர்ந்த சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் என பலர் வாழ்ந்து வருகின்றார்கள் அதன் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அவுஸ்திரேலியாவை நடுநிலைமை வகிக்கும் நாடு என்ற வகையில் ஏற்றுக்கொள்ளும் என்ற ரீதியில் அவுஸ்திரேலிய அரசானது எமக்கான அரசியல் தீர்வு விடையத்தில் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துளளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version