மன்னாரில் போரின் போது புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் தங்கத்தை தோண்டிய 6 சந்தேக நபர்கள் நேற்று (14/11) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
போரின் போது புதைக்கப்பட்ட தங்கத்தை தேடும் முயற்சியில் குழுவொன்று அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து மன்னார் இராணுவ முகாம் அதிகாரிகளுடன் இணைந்து மன்னார் பொலிஸார் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் .
இதன்போது அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட கார்,ஜெனரேட்டர் இயந்திரம் மற்றும் மேலும் சில சொத்துக்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 மற்றும் 60 வயதுடைய ஹெட்டிமுல்ல. குடியாகும்புர, பாணந்துறை, பொரலந்த மற்றும் ஹல்பே ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்டவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்