”சமூக ஊடகங்களில் சேறுபூசுவதை நாம் கருத்திற்கொள்வதில்லை” – சஜித் பிரேமதாச

சமய மேம்பாட்டுப் பணிகளைச் செய்யும்போது, சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு விமர்சனங்கள்,அவதூறுகள் கூறப்பட்டாலும், அவற்றையெல்லாம் பெருட்படுத்தாது ஒதுக்கித் தள்ள வேண்டும் என்றும், மனசாட்சிக்கு இணங்க செயற்பட வேண்டும் என்றும், எத்தனை அவமானங்களையும், அவதூறுகளையும் பெற்றாலும், நாம் செய்வது தூய்மையானதும் நன்நோக்கமும் கொண்டிருந்தால் இவற்றை கருத்திற்கொள்ளாமல் இருப்பது மேல் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அவதூறுகளாலும், அவமானங்களாலும் அசையாமல், திடமான நிலைப்பாட்டில் இருந்தி கொண்டு சம்புத்த சாசனத்தைப் பாதுகாக்க ஒன்றுபட வேண்டும் என்றும், அரசியலமைப்புச் சட்டமும் இதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் பிரகாரம் சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பதும் போஷிப்பதும் அனைத்து பௌத்த குடிமக்களின் பொறுப்பும் கடமையும் ஆகும் என்றும் அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

வெயங்கொடை குணசிறி சங்கபோ விகாரையின் தர்ம போதனை கட்டிட திறப்பு விழா மற்றும் திருவுருவச் சிலை திறப்பு விழா ஆகியவற்றில் இன்று(12) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version