ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்துக்கு விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாக சபைக்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடை தொடர்பில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு துறை அமைச்சர் சார்பில் வழக்கறிஞர் G.G அருள்பிரகாசம் இந்த மனுத்தாக்கலை செய்துள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்து கடந்த 07 ஆம் திகதி விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால நிர்வாகசபை ஒன்றை நிறுவினார். அதனது வர்த்தமானி மூலம் அறிவித்தார். அந்த இடைக்கால சபையை நடைமுறைக்கு வராதபடி ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா தடையுத்தரவை பெற்றுக்கொண்டார். நீதிமன்றம் குறித்த அறிவிப்புக்கு 14 நாட்கள் இடைக்கால தடையினை வழங்கியுள்ளது.