இலங்கையில் கொவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் மீண்டும் ஏற்படும் அதிகரிப்பை குறைத்து மதிப்பிட வேண்டாம் என சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 700ஐ நேற்று (13/11) தாண்டியது. நேற்று 716 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில்இ இந்த வாரத்தில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் தெளிவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குடும்ப மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.