ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிரான டயனா கமகே முன்வைத்த மனு நிராகரிப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளில் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் பணியாற்ற முடியாது என தடை விதிக்குமாறு இராஜாங்க அமைச்சர் டயனா கமகே அவர்களால் முன்வைக்கப்பட்ட மனு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான, ஐக்கிய மக்கள் சக்தியின் சட்ட விவகார செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச அவர்கள் செயற்படுவதையும்,
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் செயற்படுவதையும் தடுத்து இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயனா கமகே அவர்களால் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த மனு இன்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்விருவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமை காணப்படுவதாகவும், டயனா கமகே அந்த பதவியில் இருந்து விலகியமை மறைத்துள்ளதாகவும், 2021 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து சஜித் பிரேமதாச அவர்களும், ரஞ்சித் மத்தும பண்டார அவர்களும் விலகியுள்ளதாகவும் தெரிவித்து நீதிமன்றத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமை இவ்விருவருக்கும் காணப்படுவதால், அந்த பதவிகளை அவர்களால் தொடர்ந்தும் வகிக்க எவ்வித தடைகளும் இல்லை என தீர்மானித்து நீதிமன்றத்தால் இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் அடுத்த தவனை பெப்ரவரி 12ம் திகதி இடம்பெறும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version