இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் கிராமிய பொருளாதார ராஜாங்க அமைச்சர் கெளரவ காதர் மஸ்தான் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
மன்னார் முருங்கன் மத்திய கல்லூரியில் இடம் பெற்ற, தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்குப் புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் அமைச்சர் அடங்கிய குழுவினர்.
பிற்பகல் 2 மணியளவில் மன்னார் வைத்தியசாலையை வந்தடைந்தடைந்தனர்.
இதன்போது இந்திய உயர்ஸ்தானிகரடங்கிய குழுவினர் மற்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் புஸ்பகாந்தன், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன் ஆகியோருக்கிடையே சிறு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
வைத்திய சாலையின் நாளாந்த நடவடிக்கைகள் ,தேவைகள் மற்றும் குறைபாடுகள் என்பவற்றைக் கேட்டறிந்த இந்திய உயர்ஸ்தானிகர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவினை நிர்மாணித்தல் , மற்றும் CT scanner கொள்வனவு செய்தல் நிதி தொடர்பாக விரைவில் சாதகமான பதிலை வழங்குவதாகவும், மற்றும் உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் மிகவும் குறந்தளவில் காணப்படுகிற போதிலும் இந்த வைத்தியசாலையானது மக்களுக்கு நிறைவான சேவையினை வழங்குவதையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.