வீதி விபத்துக்களை குறைத்தல் மற்றும் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில் தவறுகளின் அடிப்படையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை அடையாளப்படுத்தி இரத்து செய்யும் செயற்பாடு எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கவனக்குறைவாக வாகனம் செலுத்துவதன் காரணமாக, நாளாந்தம் அதிகளவான வீதி விபத்துக்கள் இடம்பெற்றுவரும் நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த முறையை அமல்படுத்த மோட்டார் போக்குவரத்து துறை ஏற்கனவே திட்டமிட்டுள்ள நிலையில், அந்த திட்டைத்தை விரைவில் முன்னெடுக்கவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.