16 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் இளைஞனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி துரதிஷ்டவசமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதுளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 20 வயதுடைய சந்தேகநபர் எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தரம் 11இல் கல்வி பயிலும் நெத்து ஹசரங்கி என்ற மாணவிஏ இவ்வாறு உயிரிழந்தார்.
நான்கு நாட்களுக்கு முன்னர் முகநூல் ஊடாக இனங்காணப்பட்ட இளைஞன் ஒருவன் இவரை முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு பதுளை ரிதிபன சருங்கல் கந்த பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று வன்புணர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் சம்பவ இடத்திலிருந்து வீட்டிற்கு வந்த மாணவி தனது பாட்டியின் உயர் ரத்த அழுத்த மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பெண் பிள்ளைகளுக்கு தொடர்ந்தும் நடைபெறும் இது போன்ற சம்பவங்களுக்கு என்னதான் தீர்வு?