உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் ஜனவரி மாதம் நடாத்தப்படவுள்ள உயர்தரப் பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக சமூகவலைத்தளங்களில் வெளியாகிவரும் தகவல்களில் உண்மையில்லை என கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை எக்காரணம் கொண்டும் பிற்போடப்பட மாட்டாது என கல்வித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் வெளியிடவுள்ளதாகவும், மாணவர்களின் எதிர்பார்புகளுக்கு அமைய பரீட்சை மற்றும் பெறுபேறுகளை குறித்த நேரத்தில் பெற்றுகொள்ள தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version