சிசுக்களை விற்க முயன்ற தாய் உட்பட இருவர் கைது!

பச்சிளம் இரட்டை குழந்தைகளை தலா 25000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற தாய் மற்றும் மேலும் இரு பெண்கள் ராகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று (07.12) காலை கைது செய்யப்பட்டதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களில் இரட்டைக் குழந்தைகளின் இளம் தாய் மற்றும் ஒரு குழந்தையை வாங்கிய பெண்ணொருவர் ராகம பிரதேசத்திலும் மற்றைய குழந்தையை விலைக்கு வாங்கிய பெண் களனி பிரதேசத்திலும் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராகம பிரதேசத்தில் வீட்டு வேலை செய்து வந்த குறித்த தாய் கொழும்பு காசல் மகப்பேறு வைத்தியசாலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version