இலங்கை 19 வயதிற்குட்பட்ட மற்றும் ஜப்பான் 19 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையில் இன்று (09.12) ICC அக்கடமி 2, டுபாயில் 19 வயதிற்குட்பட்ட ஆசிய கிண்ணத்தின் 4 ஆவது போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய ஜப்பான் அணி 30.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 75 ஓட்டங்களை பெற்றது. இதில் சார்ல்ஸ் ஹின்ஸ் 36(52) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் மல்ஷா தருப்பதி 3 விக்கெட்களையும், கருக சங்கெத் 2 விக்கெட்களையும், டுவிந்து ரணதுங்க, விஷ்வ லஹிரு, டினுற கலுபஹான, விஹாஸ் தெவ்மிக்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களைக் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 12.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 76 ஓட்டங்களை பெற்றது. இதில் சினெத் ஜெயவர்த்தன ஆட்டமிழக்காமல் 26(24) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் கியபர் லேக் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.