120 வருடங்களுக்கு பிறகு கிடைக்கப்பெற்ற புத்தகம்!

Pennsylvaniaவில் உள்ள Carbondale Public Libraryஇல் 1904 ஆம் ஆண்டு கொண்டு செல்லப்பட்ட ஒரு புத்தகம் 120 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே நூலகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. Harry Collingwood என்பவர் எழுதிய The Cruise of the Esmeralda எனும் புத்தகமே இவ்வாறு 120 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கப்பெற்றுள்ளது.

இப்புத்தகத்தினை Hawley Library எனும் நூலகம் தான் Pennsylvaniaவில் உள்ள Carbondale Public Libraryக்கு மீண்டும் திருப்பி கொடுத்துள்ளது.The Cruise of the Esmeralda எனும் புத்தகத்தினுள் நூலகத்தின் விதிகள் அடங்கிய ஒரு அட்டையும் 1904 ஆம் ஆண்டின் Carbondale நூலக அட்டையும் இருந்துள்ளது.

1904 ஆம் ஆண்டின் படி இவர்கள் 872.82 டொலர் தண்டப்பணம் செலுத்த வேண்டும் . ஆனால் அதிர்ஷ்டவசமாக தற்போது 10 டொலர்ஸ் தான் தண்டப்பணமாக கட்ட வேண்டும் என அந்த நூலகம் அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version